< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒற்றுமையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றியவர் சர்தார் வல்லபாய் படேல் - மத்திய மந்திரி அமித்ஷா
|31 Oct 2022 8:15 AM IST
ஒற்றுமையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றியவர் சர்தார் வல்லபாய் படேல் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சர்தார் படேலின் இரும்பு நோக்கங்களுக்கு எதிராக எதுவும் சாத்தியமில்லை. தனது உறுதியான தலைமைத்துவத்தால், பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை ஒற்றுமை என்ற நூலில் ஒன்றிணைத்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே தேச நலனுக்காக வாழ்ந்த சர்தார் படேலின் பிறந்தநாளில், அவரது காலடியில் வணக்கம் செலுத்துவதுடன், அனைவருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.