< Back
தேசிய செய்திகள்
அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தெரியபடுத்தியவர் காந்தி; மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேச்சு
தேசிய செய்திகள்

அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தெரியபடுத்தியவர் காந்தி; மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேச்சு

தினத்தந்தி
|
2 Oct 2022 6:45 PM GMT

அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தெரியபடுத்தியவர் காந்தி என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியுள்ளார்.

மைசூரு;


நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதேபோல் கர்நாடகத்திலும் காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ைமசூருவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மைசூரு டவுனில் காந்தி சவுக்கில் இருக்கும் காந்தி சிலைக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநகராட்சி மேயர் சிவக்குமார், கலெக்டர் பகாதி கவுதம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து காந்தி சிலைக்கு மலர் தூவியும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் மந்திரி எஸ்.டி. சோமசேகர், எம்.எல்.ஏ. தன்வீர்சேட், மேயர் சிவக்குமார், துணை மேயர் ரூபா, மாநகராட்சி கமிஷனர் லட்சுமி காந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரையில் உட்கார்ந்து காந்தி அவரை நினைகூர்ந்து பஜனை செய்தார்கள். மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியதாவது:-

மகாத்மா காந்தி அகிம்சை வழியில் நம் நாட்டிற்கு சுதந்திர வாங்கி தந்தார், உலகத்திற்கு அமைதியை அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்தி. அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தெரியப்படுத்தியவர் காந்தி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்