< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் சோதனை
|15 Jun 2023 12:39 AM IST
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர்.
ஐதராபாத்,
முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிற தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. மீது வரி ஏய்ப்பு, சட்ட விரோத ரொக்க பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி. பிரபாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஜனார்த்தன ரெட்டி, சேகர் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருமான வரி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகள் நடத்தினர்.
இந்த சோதனைகள் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.