< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தி இருப்பது சரியல்ல; தேவேகவுடா சொல்கிறார்
|5 Jun 2022 3:22 AM IST
காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தி இருப்பது சரியல்ல என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
துமகூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினர் பதவியில் தான் வெற்றி பெறமுடியும். ஆனாலும் காங்கிரஸ் சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தி இருப்பதால், பா.ஜனதா சார்பில் 3-வதாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதுபற்றி அறிந்தும் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பளித்து, காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தி இருப்பது சரியல்ல. இதுபோன்று அரசியலில் நடப்பது எங்கு சென்று முடியும் என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் யாரை பற்றியும் குறை சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.