< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
யு.பி.ஐ. பண பரிவர்த்தனை: விதிமுறைகளை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
|21 Oct 2022 1:21 AM IST
யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு விதிமுறைகளை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,
யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க கோரி மராட்டியத்தை சேர்ந்த சங்கர் நாகேஷ் முத்கிரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹீமா கோலி அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க கோருவது கொள்கை சார்ந்தது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிதான் முடிவு எடுக்க வேண்டும். எனவே, கோரிக்கை மனுவை ரிசர்வ் வங்கியிடம் அளிக்க அனுமதி அளிக்கிறோம் என உத்தரவிட்டு ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.