< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தி.மு.க ஆட்சியை கண்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர் - பிரதமர் மோடி
|29 March 2024 12:40 PM IST
தமிழக பா.ஜ.க தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி,
நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ‛எக்ஸ்' தளபதிவில் கூறியுள்ளதாவது:-
மக்களவை தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக ‛ எனது பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாட காத்திருக்கிறேன்.
தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ.க அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய் உள்ளதையும், பா.ஜ.க.,வை தமிழக மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்பதும் உண்மைதான் என பதிவிட்டுள்ளார்.