நாட்டின் பிரதமருக்காக சமைப்பது தனக்கு பெருமை - சமையல் கலைஞர் யாதம்மா நெகிழ்ச்சி.!
|நாட்டின் பிரதமருக்காக சமைப்பது தனக்கு பெருமை என்று சமையல் கலைஞர் யாதம்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் பிரதமர் மோடிக்கு தெலங்கானாவின் பாரம்பரிய உணவுகளை தயாரித்து பரிமாறும் பொறுப்பு பிரபல சமையல் கலைஞர் யாதம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தனக்கு பெருமை அளிப்பதாக யாதம்மா கூறியுள்ளார்.
கங்கவள்ளி குரா மம்மிடிகாயா பப்பு எனப்படும் மாங்காய் சாம்பார், தக்காளி, வெந்தயம், உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்ட குருமா, வெண்டைக்காய் பொரியல், பீர்க்கங்காய் பொரியல், ஸ்பெஷல் மசாலா வெங்காயம், பச்சை புளுசு எனப்படும் ரசம் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை யாதம்மா சமைக்க உள்ளதாக யாதம்மா தெரிவித்தார்.
மதிய உணவு மற்றும் இரவு உணவை பிரதமருக்காக சமைக்க உள்ளதாகவும் இது உண்மையிலேயே தனக்கு பெருமை அளிப்பதாக யாதம்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், பாஜக நிர்வாகிகள் என சுமார் 400 பேர் தெலங்கானாவின் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வார்கள் என்றும் யாதம்மா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.