< Back
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.4 கோடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.4 கோடி

தினத்தந்தி
|
27 Nov 2022 12:37 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடி கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 45 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 15 மணிநேரம் ஆனது. நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 157 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 445 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்