< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு
|10 Dec 2023 5:29 PM IST
முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை,
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 1.25 லட்சம் பேர் வரை தினமும் தரிசனம் செய்ய வருவதால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.