எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது; 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை தொடக்கம்
|ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டா,
எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்
இதுகுறித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன் கூறியதாவது:-
உலகளாவிய சிறிய செயற்கைகோள்கள் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் போது, அது ஏன் செய்யப்படுகிறது? என்று எல்லோரும் கணக்கெடுப்பு செய்தார்கள். மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைகோள்களின் வரிசையில் ஏவுதல் சேவைகளுக்கான வளர்ந்து வரும் சந்தை உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும். இது முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது ஏவப்படும் செயற்கைகோள்களின் சராசரி எண்ணிக்கையில் ஏறக்குறைய 3ல் 2 மடங்கு அதிகமாகும். இந்த தேவையில் 80 சதவீதம் கமிஷன் சந்தையால் இயக்கப்படுகிறது.
6 மணி நேர கவுண்ட்டவுன்
செயற்கைகோள்களை இயக்குபவர்கள் செலவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தேடுகின்றனர். இவர்களுக்கு நாம் பெரிய ராக்கெட்டில் இவருடைய செயற்கைகோள்களை அனுப்பும்போது செலவு அதிகமாகிறது. எனவே அதனை குறைப்பதற்காக, செலவு குறைந்த சிறிய வகை ராக்கெட்டுகள் தயாரித்து, செயற்கைகோள்கள் வடிவமைப்பாளர்களுடைய முழுமையான தேவையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.
எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் 25 மணி நேரம் தேவைப்படாது. இது சிறிய ராக்கெட் என்பதால் ராக்கெட் ஏவப்படும் நாளான 7-ந்தேதி அன்று 6 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது அதிகாலை 3.18 மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.