< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோவுக்கு 279 மில்லியன் டாலர் வருமானம் - மத்திய அரசு தகவல்
|27 July 2022 10:41 PM IST
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அன்னிய செலாவணி ஈட்டியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இஸ்ரோவின் வருமானம் தொடர்பான கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதன்படி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 34 நாடுகளின் 345 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வர்த்தக ரீதியாக 279 அமெரிக்க மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மாத துவக்கத்தில் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.