< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடந்த ஆண்டு புற்று நோய் பாதிப்பு இருந்தது..தற்போது குணம் ஆகிவிட்டேன் : இஸ்ரோ தலைவர் சோம்நாத்
|4 March 2024 4:05 PM IST
ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
சென்னை,
கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி புற்று நோய் பாதிப்பு தனக்கு இருந்தது தெரியவந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சோம்நாத் கூறியதாவது: கடந்த ஆண்டு எனக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அதாவது, ஆதித்யா எல்1 செலுத்தப்பட்ட நாளில் புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்; தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.