மோகன் யாதவை முதல்-மந்திரியாக தேர்வு செய்த பாஜகவை கடுமையாக சாடிய காங்கிரஸ்
|பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமான நிலையிலும் முதல்-மந்திரி யார் என்பதை பாஜக முடிவு செய்யாமல் தத்தளிப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்திருக்கிறது. இதனால் முதல்-மந்திரி யார் என்பதை தீர்மானித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.
இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியாக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
"தேர்தல் முடிந்த பிறகு 8 நாட்களுக்குப் பின், மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரியை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. அவர் மீது பெரிய அளவிலான முறைகேடு உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடும் நபராக இருக்கிறார். இதுதான் மத்திய பிரதேச மக்களுக்கு மோடியின் உத்தரவாதமா?. என்று தெரிவித்துள்ளார்.
முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள மோகன் யாதவ் சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.