< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
7 Sep 2023 4:18 PM GMT

கேரளாவில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 582 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

திருவனந்தபுரம்,

கேரளாவில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் போக்சோ சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கேரளாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 1,002 போக்சோ வழக்குகள் பதிவாகின.

இதன் எண்ணிக்கை சுமார் 4 மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 582 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் 5 ஆயிரத்து இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இச்சம்பவங்கள் வீடுகள், பள்ளிகள், உணவகங்கள், நண்பர்களின் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அரங்கேறி உள்ளது.

மேலும் செய்திகள்