< Back
தேசிய செய்திகள்
துங்கா ஆற்றில் பெண் பிணம் மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

துங்கா ஆற்றில் பெண் பிணம் மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

துங்கா ஆற்றில் பெண் பிணம் மீட்கப்பட்டது. கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவமொக்கா-

சிவமொக்கா டவுன் பகுதியில் துங்கா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரம் நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரை யாரும் கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசிவிட்டு சென்றார்களா? என கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்