< Back
தேசிய செய்திகள்
செலுத்திய வரி மட்டுமே இவ்வளவு கோடியா? - அனைவரையும் வாய் பிளக்க வைத்த அம்பானி

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

செலுத்திய வரி மட்டுமே இவ்வளவு கோடியா? - அனைவரையும் வாய் பிளக்க வைத்த அம்பானி

தினத்தந்தி
|
30 Aug 2022 8:31 AM IST

புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் இருக்கும் என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம், ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தியதாக அந்த குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்துக்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் உள்ளது பெருமிதமாக உள்ளது என்றும், புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ளபோதிலும், மத்திய அரசின் திறமையான மேலாண்மை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்