< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குகிறாரா? காங்கிரஸ் மறுப்பு
|9 Jun 2023 5:20 PM IST
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
புதுடெல்லி,
ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் கேசி வேணுகோபால் தெரிவித்திருப்பதாவது, சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.