< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பா.ஜனதா தலைவரிடம் ஒழுங்கீனமாக நடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் - உத்தரபிரதேச அரசு நடவடிக்கை
|22 Jan 2023 5:49 AM IST
சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நீரஜ் குமாரை உத்தரபிரதேச அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர், வீரேந்திர பால் சிங் யாதவ். முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவரான இவருக்கும், போலீஸ் சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நீரஜ் குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 20-ந்தேதி இரவு வீரேந்திர பால்சிங் வீட்டுக்கு சென்ற நீரஜ் குமார், அவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நீரஜ் குமாரை அரசு நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.