< Back
தேசிய செய்திகள்
3 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு காப்பீடு பாலிசிகளில் சலுகை வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை
தேசிய செய்திகள்

3 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு காப்பீடு பாலிசிகளில் சலுகை வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை

தினத்தந்தி
|
28 Dec 2022 9:11 PM IST

காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீடு நிறுவனங்களிடம் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் தற்போது சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பெரும்பாலான மக்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீடு நிறுவனங்களிடம் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான ஆயுள் காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க காப்பீடு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்