ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு புதிய பதவி
|காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர் உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் டி.ரூபா. இவர், பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், டி.ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ரோகிணி சிந்தூரி, டி.ரூபாவுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு அரசு புதிய பொறுப்பு வழங்கி இருந்தது.
இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி டி.ரூபாவுக்கு நேற்று புதிய பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக டி.ரூபா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், பெங்களூரு போலீஸ் கமாண்ட் அலுவலக துணை போலீஸ் கமிஷனராக இருந்து வந்த கோன வம்சி கிருஷ்ணா பணி இடமாற்றம் செய்யப்பட்டு லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.