< Back
தேசிய செய்திகள்
அசாமில் இன்று இணைய சேவை துண்டிப்பு
தேசிய செய்திகள்

அசாமில் இன்று இணைய சேவை துண்டிப்பு

தினத்தந்தி
|
15 Sept 2024 4:25 AM IST

காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கவுகாத்தி,

அசாமில் மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நேரமான காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணைய சேவைகளும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிறுத்தப்படும். அதே வேளையில் நிலையான தொலைபேசி இணைப்புகளின் அடிப்படையிலான குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவை வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்