< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் இணையதள சேவை தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
தேசிய செய்திகள்

மணிப்பூரில் இணையதள சேவை தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2023 10:26 PM IST

மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு மணிப்பூர் அரசாங்கம் நிறுத்தி வைத்தது.

இதன்படி மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை இன்றோடு நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் மேலும் 5 நாட்களுக்கு(6-ந்தேதி வரை) நீட்டித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்