< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை மீண்டும் நீட்டிப்பு

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை மீண்டும் நீட்டிப்பு

தினத்தந்தி
|
12 Jun 2023 6:10 AM IST

மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை இம்மாதம் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தடை இம்மாதம் 15-ந் தேதி பிற்பகல் 3 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்