< Back
தேசிய செய்திகள்
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம்
தேசிய செய்திகள்

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம்

தினத்தந்தி
|
21 Jun 2024 8:34 AM IST

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம் செய்து வருகிறார்.

ஸ்ரீநகர்,

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் இன்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்து வருகிறார். பிரதமருடன் 7,000-க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர். இதற்காக தால் ஏரிக்கரையில் உள்ள மாநாட்டு மையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்