< Back
தேசிய செய்திகள்
சர்வதேச யோகா தினம்: மும்பை ரெயில் நிலையத்தில் யோகா செய்த பயணிகள், ரெயில்வே ஊழியர்கள்
தேசிய செய்திகள்

சர்வதேச யோகா தினம்: மும்பை ரெயில் நிலையத்தில் யோகா செய்த பயணிகள், ரெயில்வே ஊழியர்கள்

தினத்தந்தி
|
21 Jun 2023 10:27 PM IST

மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் இணைந்து யோகா செய்தனர்.

மும்பை,

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மும்பையில் உள்ள சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் இணைந்து யோகா செய்தனர். அதே போல் மும்பையில் மின்சார ரெயிலில் பயணித்த பயணிகள், ரெயிலுக்குள்ளேயே யோகா செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.



மேலும் செய்திகள்