மத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
|போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பெங்களூரு,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது மத்திய மந்திரி ஷோபா பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவர், தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக ஷோபா மீது +பெங்களூரு, மதுரை உள்ளிட்ட 3 இடங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய மந்திரி ஷோபா ஆஜராக வேண்டும் என்று போலீசார் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நேரமாக உள்ளது. நான் வேட்பாளராக இருப்பதால் தொகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் போலீசாருக்கு விசாரணையில் ஒத்துழைப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட்டு, ஷோபா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.