< Back
தேசிய செய்திகள்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
தேசிய செய்திகள்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு

தினத்தந்தி
|
29 Dec 2023 11:06 PM IST

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அடுத்த மாதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 3 ஆண்டு டைம் டெபாசிட் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகிய இரு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

3 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 7.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்