தீவிரமடையும் கர்நாடகா பந்த்.. ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள்.. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு..!
|காவிரி விவகாரத்தில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சிக்கமகளூர்,
கர்நாடகாவில் பந்த் போராட்டத்தின் போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபடுமாறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தனர். இதனால் தற்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான சிக்கமகளூரில் அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த பந்த் போராட்டத்திற்கு பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
இந்நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் பெங்களூருவில் மட்டும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பெங்களூருவில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. எனினும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளதால் பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.