< Back
தேசிய செய்திகள்
பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்
தேசிய செய்திகள்

பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்

தினத்தந்தி
|
30 Sept 2022 3:50 AM IST

பெங்களூருவில் பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்.

பெங்களூரு: பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் சுபம் சாய்னா. இவர் மாரத்தஹள்ளியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம், சில்லறை நாணயம் வாங்குவது கிடையாது. அதற்கு மாற்றாக கிரிப்டோகரன்சி வாங்கி வருகிறார். இதற்காக அவர் தனது கடையில் ஒரு பதாகையில் கிரிப்டோகரன்சி வாங்கப்படும் என்றும், கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அக்சய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

தற்போது அவை சமூக வலைத்தளத்தில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறிஉள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், டீ கடைக்காரர் கிரிப்டோகரன்சி பயன்படுத்தும் அளவிற்கு நாடு டிஜிட்டல் தரம் பெற்றுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சுபம் சாய்னா, ஆரம்ப காலத்தில் கிரிப்டோகரன்சி முதலீடு செய்து பணத்தை இழந்து வந்துள்ளார். பின்னர் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் டீ கடையை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கு கிரிப்டோகரன்சி மீது உள்ள ஆர்வம் காரணமாக தனது வாடிக்கையாளர்களிடம் பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி நாணயத்தை பெறுவதற்கு விரும்புகிறார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயம் ஆகும். இது காகிதமற்ற பணபரிமாற்ற முறையில் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கடந்த காலங்களில் கிரிப்டோகரன்சி விவகாரம் அரசுக்கு எதிராக தலை தூக்கியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்