< Back
தேசிய செய்திகள்
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
23 Feb 2023 11:26 AM GMT

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான மனு நீதிபதி பி.ஆர். ஹவாய் தலைமையிலான விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட விசாரணை இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலர், மாநில தலைமைச் செயலர்கள், மாநில உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்