< Back
தேசிய செய்திகள்
பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் சோதனை
தேசிய செய்திகள்

பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் சோதனை

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

சிக்கமகளூருவில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

சிக்கமகளூரு;


மத்திய அரசு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்து வருகிறது. இதேபோல் கா்நாடகத்திலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த சிக்கமகளூரு மாவட்ட தலைவரான ஆல்தூர் அருகே உள்ள வக்கூர் பகுதியை சேர்ந்த ஆரீப்பை போலீசார் விசாரணைக்காக அழைத்து இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் மாவட்ட கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடிவருகின்றனர். இந்த நிைலயில் நேற்றுமுன்தினம் போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் போலீசார் மல்லந்தூர் சாலையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாவட்ட செயலாளர்கள் முனீர் வீட்டிலும், காலித்கான் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்