< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள் நிலைநிறுத்தம் - இஸ்ரோ தகவல்
|22 Feb 2024 9:35 PM IST
கடந்த 17-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா,
வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற வானிலை செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பெங்களூருவில் வடிவமைத்து இருந்தது.
இந்த செயற்கைகோள் கடந்த 17-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள் பூமியை ஒருமுறை சுற்றி வர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.