உ.பி.யில் காயமடைந்த நாகப்பாம்பு சிகிச்சைக்காக டெல்லிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது..!
|உத்தரபிரதேசத்தில் காயமடைந்த நாகப்பாம்பு சிகிச்சைக்காக டெல்லிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
புடான்,
உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள ஹார்டுவேர் கடையில் தொழிலாளி ஒருவர், பெரிய இரும்பு துண்டு ஒன்றை எடுக்க சென்றபோது அங்கு நாகப்பாம்பு இருப்பதை பார்த்துள்ளார். பாம்பை கண்டதும் பயந்துபோன அவர், கையிலிருந்து இரும்பு துண்டு நழுவி, பாம்பு மீது விழுந்தது. இதில் அந்த நாகப்பாம்பு பலத்த காயமடைந்தது.
இதையடுத்து பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் தொண்டர்கள் காயமடைந்த நாகப்பாம்பை எஸ்ஓஎஸ் மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக எம்பியுமான மேனகா காந்தியிடம் தெரிவித்தனர். புடான் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சரியான வசதிகள் இல்லாததால், நாகப்பாம்பை சிகிச்சைக்காக டெல்லிக்கு அனுப்புமாறு காந்தி அறிவுறுத்தினார்.
இதையடுத்து தன்னார்வலர்கள் இருவர் ரூ.5000 செலவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்த நாகப்பாம்பை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். நாகப்பாம்பு குணமடைந்தவுடன், காட்டில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.