< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா
|11 Oct 2022 9:33 PM IST
ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ். இதன் தலைவராக எஸ். ரவிக்குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரவிக்குமார் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை இன்போசிஸ் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு வருகிற 13ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நேரத்தில் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.