இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா
|இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி,
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை பங்குச் சந்தைக்கு இன்போசிஸ் அளித்துள்ள அறிக்கையில், மோகித் ஜோஷி மார்ச் 11 முதல் விடுப்பில் இருப்பார் என்றும், நிறுவனத்தில் ஜூன் 09, 2023 வரை அவர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், மோகித் ஜோஷியின் சேவைகளுக்காகவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் இயக்குனர்கள் குழு தங்களின் ஆழ்ந்த பாராட்டுகளை பதிவு செய்து கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.