< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில், 63 இடங்களில் தகவல் பலகை
தேசிய செய்திகள்

பெங்களூருவில், 63 இடங்களில் தகவல் பலகை

தினத்தந்தி
|
15 Oct 2022 6:45 PM GMT

மல்லேசுவரம் மார்க்கெட் உள்பட பெங்களூருவில், 63 இடங்களில் தகவல் பலகை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள முக்கிய சாலைகளில் தகவல் பலகை பொருத்துவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பலகைகளில் அந்த பகுதி குறித்த வரலாற்று குறிப்புகள் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பலகையில் உள்ள கியூ-ஆர்-கோடு மூலம் ஒருவர், ஸ்கேன் செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பலகைகள் கப்பன் பூங்கா, சிட்டி ரெயில் நிலையம், மெஜஸ்டிக் பஸ் நிலையம், மல்லேசுவரம் மார்க்கெட், கன்டோண்ெமன்ட் ரெயில் நிலையம், அரண்மனை சாலை, மாநகராட்சி அலுவலகம் உள்பட நகரின் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட இருக்கிறது. அடுத்த 3 மாதத்திற்குள் 63 இடங்களில் இந்த தகவல் பலகைகளை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் பாதசாரிகள் வசதிக்காக சில முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்