< Back
தேசிய செய்திகள்
5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைவு
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைவு

தினத்தந்தி
|
12 Aug 2024 12:58 PM GMT

நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.

டெல்லி,

ஜூலை மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான பணவீக்கம் ஆகும்.

கடந்த ஜூன் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்தது. தற்போது ஜூலை மாத பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.

சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7.44 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.

சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து அதிகமாகவே இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் 5 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் ஜூன் மாதம் 9.36 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதம் 5.42 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்