< Back
தேசிய செய்திகள்
வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது
தேசிய செய்திகள்

வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2024 3:36 AM IST

வங்காள தேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலரும் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்கின்றனர்.

ஷில்லாங்,

மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய இந்திய பாதுகாப்புப் படையினர் அவர்களை ரதச்சேரா பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களில் 4 பேர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் உள்ளூர் வாசிகள் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்காள தேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டப் பலரும் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வர முயற்சிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருவதையொட்டிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்