< Back
தேசிய செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆளில்லா விமானம்; சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆளில்லா விமானம்; சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்

தினத்தந்தி
|
9 Nov 2022 2:22 PM IST

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். படையினர் சுட்டு வீழ்த்தினர்.



புதுடெல்லி,


பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் காண்டு கில்சா கிராமத்திற்கு அருகே இந்திய எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், வித்தியாச ஒலியுடன், பாகிஸ்தானில் இருந்து சந்தேகத்திற்குரிய வகையிலான ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் காலை 11.25 மணியளவில் நுழைந்து உள்ளது. இதனை பி.எஸ்.எப். படையினர் கவனித்தனர்.

அவர்கள், ஊடுருவலை முறியடிக்கும் வகையில் உடனடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதன்பின்னர், அந்த பகுதியில் பஞ்சாப் போலீசாருடன் சேர்ந்து வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையிலான ஆறு கரங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் ஒன்றை வீரர்கள் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபரில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் சர்வதேச எல்லை பகுதியில் ஊடுருவிய ஆளில்லா விமானம் ஒன்றை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்