< Back
தேசிய செய்திகள்
சுவாச நோய் குணமாக சூடு வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

சுவாச நோய் குணமாக சூடு வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
30 Dec 2023 7:30 PM IST

இரும்பு கம்பியால் சூடு வைத்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டது.

ஷாதோல்,

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் சுவாச நோய் குணமாக சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்ட ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பந்த்வா கிராமத்தில் இரும்பு கம்பியால் சூடு வைத்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டது. இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 21-ந்தேதி அந்த குழந்தை ஷாதோல் மாவட்ட மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்