பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் பல அரசுகளை கவிழ்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்: பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
|நாட்டில் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் பல அரசுகளை கவிழ்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என பா.ஜ.க.வை கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்ல சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி கெஜ்ரிவால், நாட்டில் இன்று வரை அவர்கள் பல அரசுகளை கவிழ்த்துள்ளனர். கோவா, கர்நாடகா, மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம், பீகார், அருணாசல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் அரசு கவிழ்ப்பு நடந்துள்ளது.
நகரில் ஒரு தொடர் கொலைக்காரர் உள்ளார். அவர், ஒன்றன்பின் ஒன்றாக படுகொலைகளை செய்து வருகிறார். பொதுமக்கள் அரசு ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி, தேர்ந்தெடுக்கும் அரசை கவிழ்க்கின்றனர் என பா.ஜ.க.வை கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசானது, வருகிற திங்கட்கிழமை அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. கூட கட்சியை விட்டு செல்லவில்லை என்று நிரூபணம் செய்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது.