< Back
தேசிய செய்திகள்
இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்
தேசிய செய்திகள்

இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
8 Aug 2023 12:15 AM IST

கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.

சாந்திநகர்:

பெங்களூரு மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு, இந்திராதனுஸ் சொட்டு மருந்து வழங்கும் தொடக்க விழா பெங்களூரு சாந்திநகர் ஆஸ்டின் டவுனில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த பணியை தொடங்கி வைத்தார். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தால், அத்தகையவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். மேலும் சொட்டு மருந்தாகவும் வழங்கப்படும்.

குறிப்பாக கொரோனா காலத்திலும், இடம் பெயர்ந்து வந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட தவறி இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு இந்த தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களிலும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வருகிற 12-ந் தேதி வரை இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

அதன் பிறகு வருகிற செப்டம்பர் 11-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரையிலும், அக்டோபர் 9-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரையிலும் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு பெற்றோர் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்