< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வெஜ் பிரியாணியில் எலும்பு - உணவக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
|28 Dec 2022 11:56 AM IST
இந்தூரில் சைவ உணவு சாப்பிடும் நபருக்கு அசைவ உணவு வழங்கியதற்காக உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தூர்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் நபர் ஒருவருக்கு அசைவ உணவு வழங்கியதற்காக அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகாஷ் துபே என்ற நபர் அந்த உணவகத்தில் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலும்புகள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
தொடர்ந்து ஆகாஷ் விஜய் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராதி மீது 298-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் சம்பத் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.