< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமயமலையில் 17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி செய்யும் இந்தோ-திபெத்திய எல்லை போலீசார்
|21 Jun 2022 9:42 AM IST
இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் இமயமலையில் 17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி செய்தனர்.
புதுடெல்லி,
8வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், வடக்கில் லடாக் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் யோகா பயிற்சி செய்தனர். சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்தனர்.
லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் & அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியா-சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறைய வைக்கும் குளிருக்கு மத்தியில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து ஊக்குவித்து வருகின்றனர்.