< Back
தேசிய செய்திகள்
பப்ஜி காதல்: நொய்டாவில் கைது செய்யப்பட்ட உ.பி. இளைஞருக்கும், பாக். பெண்ணுக்கும் ஜாமின்
தேசிய செய்திகள்

பப்ஜி காதல்: நொய்டாவில் கைது செய்யப்பட்ட உ.பி. இளைஞருக்கும், பாக். பெண்ணுக்கும் ஜாமின்

தினத்தந்தி
|
7 July 2023 11:11 PM GMT

பப்ஜி விளையாட்டின் போது பாகிஸ்தான் பெண்ணுக்கும் உ.பி. இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா பகுதியை இளைஞன் சச்சின். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்துவருகிறார்.

இதனிடையே, சச்சின் தனது செல்போனில் 2019-ம் ஆண்டு முத்ல ஆன்லைன் பப்ஜி விளையாட்டு விளையாடியுள்ளார். அப்போது, சச்சினுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன.

பப்ஜி விளையாட்டின் போது சச்சினுக்கும், சீமாவும் அடிக்கடி பேசியுள்ளனர். அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனது காதலனான சச்சினை பார்க்க வேண்டும் என எண்ணிய சீமா தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளார்.

சீமா 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்றுள்ளார். அங்கு சச்சினும் சீமாவும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் நேபாளத்தில் இருந்து கடந்த மாதம் சச்சின் சீமாவை அவரது 4 குழந்தைகளுடன் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். சீமாவும் அவரது 4 குழந்தைகளும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இதனிடையே, ரபுபுரா பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பெண் தங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் உ.பி.போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீமா ஹைதர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் அவர் தனது 4 குழந்தைகளுடன் பப்ஜி ஆன்லைன் காதலன் சச்சினுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சீமா அவரது 4 குழந்தைகள், சச்சின், சச்சினின் தந்தை உள்பட 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சச்சின், சீமா உள்பட 7 பேருக்கும் கோர்ட்டு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் தங்களை பிரித்துவிட வேண்டாம் எனவும் தான் இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டுமென சீமா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்