< Back
தேசிய செய்திகள்
எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள் மீது இந்திரா காந்தி இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார் - அமித்ஷா
தேசிய செய்திகள்

'எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள் மீது இந்திரா காந்தி இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார்' - அமித்ஷா

தினத்தந்தி
|
25 Jun 2024 6:21 PM IST

எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள் மீது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் பலமுறை நசுக்கியது. எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள் மீது இரக்கமற்ற கொடுமைகளை இந்திரா காந்தி கட்டவிழ்த்துவிட்டார்.

ராகுல் காந்தி, தனது பாட்டி எமர்ஜென்சியை அமல்படுத்தியதையும், தனது தந்தை ராஜீவ் காந்தி, ஜூலை 23, 1985 அன்று மக்களவையில், இந்த கொடூரமான அத்தியாயத்தைப் பற்றி மிகவும் பெருமிதமாக, "எமர்ஜென்சியில் எந்த ஒரு தவறும் இல்லை" என்று கூறியதையும் மறந்துவிட்டார்.

மேலும் ராஜீவ் காந்தி, 'ஒரு பிரதமர் எமர்ஜென்சி தேவை என்பதை உணர்ந்த பின்பும் அதை அமல்படுத்தவில்லை என்றால் அவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்க தகுதியற்றவர்' என்று கூறினார். சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் இந்த செயலே, காங்கிரஸ் கட்சிக்கு குடும்பம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது என்பதைக் காட்டுகிறது."

இவ்வாறு அமித்ஷா பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்