< Back
தேசிய செய்திகள்
மேம்படுத்துதல் பணி காரணமாக இணையதளம், கால் சென்டர் சேவைகள் இன்று பாதிக்கப்படும் - இண்டிகோ நிறுவனம் தகவல்

கோப்புப்படம் PTI

தேசிய செய்திகள்

மேம்படுத்துதல் பணி காரணமாக இணையதளம், கால் சென்டர் சேவைகள் இன்று பாதிக்கப்படும் - இண்டிகோ நிறுவனம் தகவல்

தினத்தந்தி
|
14 Jan 2023 9:31 AM IST

மேம்படுத்துதல் பணி காரணமாக இணையதளம், கால் சென்டர் சேவைகள் இன்று சில மணி நேரம் பாதிக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம், இன்று மேம்படுத்துதல் பணி காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் இணையதளம், செயலிகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் ஆகியவை சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

300 விமானங்களைக் கொண்ட இண்டிகோ நிறுவனம் 102 உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களை இணைக்கும் 1,600 க்கும் மேற்பட்ட விமானங்களை தினமும் இயக்குகிறது.

இந்த நிலையில் நேற்று இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எங்கள் அமைப்புகள் ஜனவரி 14, 2023 அன்று மேம்படுத்தப்படும். இது எங்கள் வலைத்தளம், செயலி மற்றும் கால் சென்டரை 00.30 மணி முதல் 06.30 மணி வரை பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனையையும் இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்