< Back
தேசிய செய்திகள்
ஏர் இந்தியாவை தொடர்ந்து 500 புதிய விமானங்களை வாங்கும் இண்டிகோ...!
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவை தொடர்ந்து 500 புதிய விமானங்களை வாங்கும் இண்டிகோ...!

தினத்தந்தி
|
18 Feb 2023 2:26 AM IST

சமீபத்தில் ஏர் இந்தியா 840 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடமிருந்து 840 விமானங்களை வாங்க 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரிவுபடுத்தும் நோக்கில் 500 புதிய விமானங்களை வாங்க இண்டிகோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் தினமும் 1,800 விமானங்களை இயக்குகிறது. இதில் 10 சதவிகிதம் சர்வதேச வழித்தடத்தில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்