< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய மந்திரி அர்ஜூன் முந்தா தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய மந்திரி அர்ஜூன் முந்தா தகவல்

தினத்தந்தி
|
10 Aug 2023 5:39 AM IST

கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முந்தா தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முந்தா டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ரெயில்வே பாதுகாப்பில் 9 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

"கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்குகளை ஆராய்ந்தால், 2000-01 நிதியாண்டில் 473 ஆக இருந்த ரெயில் விபத்துகள் 2022-23 நிதியாண்டில் 48 ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது. ரெயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே பல முக்கியமான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

முக்கியமான ரெயில் பாதுகாப்பு சொத்துக்களை மாற்றுதல், புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 'ராஷ்ட்ரிய ரெயில் சன்ரக்ஷா கோஷ்' என்ற திட்டத்தின் கீழ் பெரும் நிதி ஒதுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கான இந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கணிசமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்