< Back
தேசிய செய்திகள்
அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6.77 சதவீதமாக சரிவு
தேசிய செய்திகள்

அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6.77 சதவீதமாக சரிவு

தினத்தந்தி
|
15 Nov 2022 1:15 AM IST

கடந்த அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.41 சதவீதத்தில் இருந்து 6.77 சதவீதமாக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.41 சதவீதத்தில் இருந்து 6.77 சதவீதமாக குறைந்துள்ளது.

உணவு பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணம் ஆகும். பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து 10 மாதங்களாக 6 சதவீதத்துக்கு மேலேயே பணவீக்கம் இருந்து வருகிறது.

இதுபோல், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம், 10.79 சதவீதத்தில் இருந்து 8.39 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

உணவு பொருட்கள், எரிபொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததே, மொத்தவிலை பணவீக்க சரிவுக்கு காரணங்கள் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்